search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி ஒடிசா வாலிபர் பலி"

    செய்யாறு அருகே கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஒடிசா வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த தேத்துரை பகுதியில் தனியார் கனிமவள நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 பேர் வேலை செய்து வந்தன். இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கு கம்பிகளை எடுத்து செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ருசியா மகன் நிராக்கர் (22), காஞ்சிபுரம் அச்சுவாத் மகன் டோலா மணி (23) ஆகியோர் கம்பிகளை எடுத்து சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரில் கம்பி உரசியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிராக்கர் பரிதாபமாக இறந்தார். டோலாமணி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×